Saturday, May 26, 2012

கிறுக்கல்கள்

நாளைக்கும் நீ
கோவிலுக்கு வரவேண்டும்
என்று வேண்டிக்கொண்டது
நீ கும்பிட்டு வந்த கோவிலின் சாமி !
--
எல்லா விரல்களையும் விட
பூரிப்பாய் இருந்தது
நீ பிடித்து நடந்து வந்த
என் கை நடுவிரல் !
--
கோபத்தில்
செடியிலேயே சிவந்திருக்கும்
நீ பறிக்காமல் விட்ட மருதாணி இலைகள் !

--விஜய் ஆனந்த்

பூ பிறந்தநாள் !

உலகின்
மிக அழகிய
மலரின் பிறந்தநாள் இன்று !
--
இன்று பூக்கும்
ஒவ்வொரு மலரும்
என்னவளின் பாதத்தை
சேரட்டும் !
--விஜய் ஆனந்த்

Thursday, May 10, 2012

படித்ததில் பிடித்தது


என் இயற்பியலும் இருவரின் வேதியியலும்!


சூரியனாய் ஒளிவீசும்
அவள் முகம்!

உடலாகிய குடும்பத்தில்
சிவப்புச் செவ்வாய்
அவள் உதடு!

ஒளியைப் பிரதிபலிக்கும்
இதமான திங்கள்காதலைப் பிரதிபலிக்கும்
அவள் கண்கள்!

ஞாயிறு உடன்
ஒளிவீச முயன்று
தோற்கும் புதனாய்
அவள் முகத்துடன்
தோற்கும் பொட்டு!

மையத்தைச் சுற்றும்
இரட்டை நட்சத்திரங்களாய்,
அவளையே சுற்றும்
முகத்தின் மையத்தில்
எனது கண்கள்!

ஹீலியமாய் உருவெடுக்கும்
ஹைட்ரஜன் போல்
அன்பினால் உருவெடுக்கும்
எனது காதல்!

பூமியின் தேவதையுடன்
பேசாமல் பேசிக்கொள்ளும்
எனது மனது!

அவள் - நான்
நான் - அவள்!

Friday, May 4, 2012

விதை !


நீ
கடித்துத் துப்பிய உன்
நகங்களை
விதைத்து நீரூற்றியிருந்தால்
விளைந்திருக்கும் அழகு !

--விஜய் ஆனந்த்