Thursday, June 27, 2013

போதைப் பெண்ணே !

சுண்ணாம்பு கலக்காத
பதநீரு ஓஎச்சி ...
சுர்ரென்னு ஏறுதடி
அதப்பார்த்தா ஏஉச்சி ...

உதடோடு உதடுவச்சு
உயிர்சூட்ட குறைக்கவா ...
ஓஉடம்ப ஏஉடம்பு
வியர்வைக்குள்ளே மறைக்கவா ..?

கருவேலம் பசைபோல
கட்டிநாம ஒட்டிக்கணும் ...
கட்டிலறை போர்க்களத்தில்
தோல்விக்காக முட்டிக்கணும் ...

ஓகூந்தல் உள்ளுக்குள்
நாபோயி சிக்கிக்கணும் ...
தண்டுவடம் வீணையாகும்
அளவுநாம கட்டிக்கணும் ...

ஓகூந்தல் ஏறினால்
மகிழம்பூ வாசமிழக்கும் ...
ஓவாசம் வீசினால்
பொணம்கூட சுவாசமிழுக்கும் ...

கருமையான வானவில்
கண்ணேஉன் புருவமடி ...
எழிலேநீ இயற்கையின்
ஏழாவது பருவமடி ...

Wednesday, January 9, 2013

மறக்க நினைக்கிறேன் முடியவில்லை !


உன்னை மறக்க நினைத்து 
தினம் தினம் 
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் 
இன்றாவது மறந்து விடுவேனா என்று !

கண்ணீரில் உன் நினைவுகளை 
கரைத்துவிடலாம் என்றெண்ணி 
தினம் தினம் அழுகிறேன் 
என் கண்ணீர் நின்றபாடில்லை !

இருந்தும் மறக்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கிறேன் ! என்ன செய்ய ! அசையும் ஒவ்வொரு அணுவிலும் தான் உன்முகம் அலைபாய்கிறதே !!

எந்த குழந்தை சிரித்தாலும் என்னவள் குழந்தை சிரிப்பு ஞாபகம் ! 
எந்தப் பூ விரிந்தாலும் என்னவள் புன்னகைப் பூ ஞாபகம் !
என் அன்னைமடி சாய்கையில் என்னவள் ஸ்பரிசம் ஞாபகம் !
பச்சைக் கிளிகள் பார்க்கையில் என்னவள் கொஞ்சல் மொழிகள் ஞாபகம் !
வெள்ளை மேகம் காண்கையில் என்னவள் வெண்மேனி ஞாபகம் ! 
நிலவு மிதக்கப் பார்க்கையில் என்னவள் உறக்கம் கொண்ட ஞாபகம் !
ரோஜா இதழ் பார்க்கையில் என்னவள் இதழ் சுவைத்த ஞாபகம் !
மயில் இறகு வருடுகையில் என்னவள் மேனி தீண்டிய  ஞாபகம் !

இறைவா ! என்னவளுடன் நான் சேர வழி இல்லையானாலும் அவள் நினைவுகளுடனாவது வாழ வழி கொடு !

Wednesday, September 26, 2012

நெற்றிப்பொட்டு !

 இருளைக் கண்டு நீ அச்சப்படுவாயோ?
என்று எண்ணித் தான்
உன் நெற்றிப்பொட்டை எடுத்து
வானில் ஒட்டி வைத்து
அவைகளுக்கு பெயர் வைத்தேன்
நிலவென்றும், நட்சத்திரங்கள் என்றும்...!

--விஜய் ஆனந்த்

முத்தம் !

பெண்ணே ! நீ எனக்குக் கொடுக்கும்
முத்தங்களில் ஒன்றாவது தவறி
தன்னுள் விழாதா என்கிற
ஏக்கத்துடன் வந்து வந்து
திரும்புகின்றன கடல் அலைகள்...!

--விஜய் ஆனந்த்

Thursday, September 20, 2012

கிறுக்கல்கள் !

நீ நிலவா?
இல்லை
நிலவு நீயா?
--
உன்னைப் பார்த்து
வெட்கம் தாளாமல்
தன்னை மேகத்துக்குள்
மறைத்துக்  கொண்டாதோ நிலவு ?
--
தேன் குழைத்துச் செய்த
தங்கச் சிலையோ நீ?
--
கிளி வந்து
கொத்திச் செல்லும்
அத்திப் பழமோ
உன் இதழ்கள் !

--விஜய் ஆனந்த்



Friday, August 31, 2012

கவிதைக்கான கவிதைகள் !

என் செவிகளுக்கும்
நாவிருந்திருந்தால் 
உன் கொஞ்சல் மொழி சுவைத்து
தித்தித்திருக்கும் !
--

எப்படியாவது 
உன்னை விட அழகாக வேண்டும்
என்று
அழகுக்கலை கற்றுக் கொள்கிறதாம் 
நிலவு !
--

பூமி 
தன்னைத் தானே 
சுற்றிக் கொள்கிறதாம் !
ஒருவேளை 
உன் பேரழகைப் பார்த்த 
பேரதிர்ச்சியாய்  இருக்குமோ?
--

மழை பெய்யும் போது
வெளியில் சென்று விடாதே !
மழை உன்னழகில்
நனைந்துவிடப் போகிறது !

--விஜய் ஆனந்த் 

Thursday, August 9, 2012

நம்பிவிட்டேன் !



யார் சொல்லியும் நம்பவில்லை !
உன்னைப் பார்த்த நொடி நம்பிவிட்டேன் !
ஆம் !
தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் !

--விஜய் ஆனந்த்